Hot Posts

6/recent/ticker-posts

இரு சகோதரர்களின் சண்டை கலவரமாக மாற்றம் – மோட்டார் சைக்கிள் தீக்கிரை

நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் நேற்று (17) மாலை 6 மணியளவில் நடந்த சோகமான சம்பவத்தில், இரு சகோதரர்கள் இடையே ஏற்பட்ட சண்டையால் இருவரும் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 இலட்சம் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.

சுரங்கத்தை அன்டிய பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்ததாவது, சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியதில் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் தற்போது கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments