லண்டனில் இயங்கி வந்த ஒரு கோழிக்கடையில், சட்டவிரோத தொழிலாளர்கள் வேலை செய்து வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தக் கடையின் உரிமம் அதிகாரிகளால் இரத்து செய்யப்பட்டது என உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
2023 ஏப்ரல் முதல் 2025 மார்ச் வரையிலான காலப்பகுதியில், இந்த கடை நான்கு முறை குடிவரவு அமலாக்க அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும், சட்டவிரோதமாக வேலை செய்தவர்கள் பிடிபட்ட நிலையில், மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடையின் உரிமையாளராக இருக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர், பிரித்தானிய குடியேற்றச் சட்டங்களை மீறி செயல்பட்டுள்ளதாகவும், தனது வணிகத்தை சட்டப்படி நடத்தும் முயற்சி மேற்கொள்ளவில்லை எனவும் அதிகாரிகள் சாடியுள்ளனர்.
சம்பவ இடத்தில் பிடிபட்டவர்கள், பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் யாரும் அகதி தஞ்சம் கோரவில்லை என்றும், இங்குள்ள வேலை அனுமதி கிடையாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு எடுத்ததற்காக கடை உரிமையாளருக்கு பெருந்தொகை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
0 Comments