யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் உள்ள இந்துக் கல்லூரிக்கு அருகே நேற்று (22.04.2025) காலை ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றது. இதில் பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்ற 12 வயது மாணவன் ஒருவர் காயமடைந்தார்.
தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவன் வழமைபோல் பாடசாலைக்கு சென்றபோது, பின்னால் வந்த பெண் ஒருவர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் மாணவன் வீதியில் விழுந்ததுடன், காயங்களுடன் கிடந்த அவரை உதவாது அந்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
உடனடியாக பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் சிறுவனுக்கு முதலுதவி செய்து, சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்தனர். மாணவனுக்கு கை முறிந்ததால், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
0 Comments