யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அதிகாலை, ஒரு டிப்பர் வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின்படி, குறித்த டிப்பர் வாகனம் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணமாக, பொலிஸார் நிறுத்த உத்தரவிட்ட போதும் டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக பயணித்ததாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். வாகனத்தின் சாரதி மற்றும் உரிமையாளரை அடையாளம் காணும் பணியும் நடந்து வருகிறது.
0 Comments