கண்டி – ஹத்தரலியத்த: மின்னழுத்தியை சூடு செய்து மனைவியின் அந்தரங்க உறுப்பில் வைத்த கொடூர சம்பவம் ஒன்று கண்டி மாவட்டத்தில் உள்ள ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
27 வயதான மனைவியின் மீது, தனது சந்தேகத்தின் அடிப்படையில் கொடூரமாக பழிகொள்வதுபோன்று நடந்துகொண்டதாக கூறப்படும் 34 வயதான கணவன், ஹத்தரலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் தகாத உறவு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதால், அவர் இவ்வாறு மோசமான செயலை மேற்கொண்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலால் படுகாயமடைந்த மனைவி தற்போது பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கலகெதர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
0 Comments