Hot Posts

6/recent/ticker-posts

பாடசாலை அதிபர் சடலமாக மீட்பு: மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழப்பு சந்தேகம்

பதுளை – அலுகொல்ல-கந்தேகெதர வீதியில் நேற்று (திங்கட்கிழமை) காலை, பாடசாலை அதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்பும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

59 வயதுடைய ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர், சார்னியா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவில் அதிபராக கடமையாற்றிவருபவராகும்.

சம்பவத்தின்போது, கந்தேகெதரவிலிருந்து பதுளைக்குச் செல்லும் தனியார் பேருந்து தியனவல பகுதியிலிருந்து பயணித்தபோது, வீதியோரத்தில் ஒருவர் வீழ்ந்திருப்பதை அதன் ஓட்டுனர் கவனித்துள்ளார். உடனடியாக அவர் எதிர் திசையில் வரும் மற்றொரு பேருந்தை நிறுத்தி, பாதிக்கப்பட்ட நபரை கந்தேகெதர வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ரவிச்சந்திரன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்றபோது வீதியிலிருந்து விலகி, அருகிலிருந்த வடிகாலில் வீழ்ந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இது விபத்தா அல்லது வேறு காரணமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Post a Comment

0 Comments